1781397 tirupatitemple
இந்தியாசெய்திகள்

திருப்பதி ஏழுமலையான் நடை மூடப்பட்டது!

Share

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மூடப்பட்டது.

இன்று மாலை 5.11 மணி முதல் மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி காலை 8.11 மணி முதல் இரவு 7.30 வரை 12 மணி நேரம் ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி இன்று காலை 8.11 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது. வி.ஐ.பி பிரேக் தரிசனம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை மற்றும் ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன.

சூரிய கிரகணத்தன்று சமையல் செய்யக்கூடாது என்பதால் அன்னதான கூடமும் இன்று காலை முதல் மூடப்பட்டதால் பக்தர்களுக்கு வழக்கம் போல் வழங்கப்பட்டு வந்த அன்னதானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவில் முழுவதும் கழுவி சுத்தம் செய்யப்பட்டு சாமிக்கு பரிகார பூஜைகள் முடிந்தவுடன் இரவு 7.30 மணிக்கு மீண்டும் கோவில் திறக்கப்படுகிறது. இதையடுத்து பக்தர்கள் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நவம்பர் 8-ந் தேதி மதியம் 2.39 முதல் 6.19 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அன்றும் காலை 8.40 முதல் இரவு 7.20 வரை கோவில் நடை மூடப்படுகிறது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...