IMG 20221023 WA0019 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தீய செயற்பாட்டில் இருந்து விலகுங்கள்!

Share

போதைவஸ்து பாவனைக்கும் போதைவஸ்தை கடத்துவதற்கும் செயல்படுபவர்கள் அனைவரும் அந்த தீய செயற்பாட்டில் இருந்து விலக வேண்டுமென யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் மன்றாட்டமான கோரிக்கையொன்றை விடுத்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கும் பெரும் தீமையாகிய போதைவஸ்து பாவனைக்கு எதிராக அனைவரும் பாடுபட வேண்டும். அதற்கு எதிராக பாடுபடுபவர்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.

இன்னமும் போதைவஸ்து பாவனைக்கும் போதைவஸ்தை கடத்துவதற்கும் பலரும் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களிடம் நாங்கள் மன்றாட்டமாக கோருவது என்னவெனில் இந்த தீய செயற்பாட்டில் இருந்து அனைவரும் விலக வேண்டும்.

இவ்வாறான தீய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாதுகாப்பு தரப்பினரும் சிவில் உத்தியோகத்தர்களும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு போதைப்பொருளால் பாதிக்கப்படுகின்ற பிள்ளைகளை பெற்றோர்கள் இனம் கண்டு உடனடியாக புனருத்தாரன இடங்களுக்கு அனுப்பி சிகிச்சைக்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...