1776326 rape
உலகம்செய்திகள்

2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பலாத்காரம்! – அதிர்ச்சி தரும் முடிவு

Share

பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துளள்து.

கவுரவக் கொலைகள் அதிக அளவில் நடைபெறும் பாகிஸ்தானில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமைகளை சர்வே எடுத்துக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. சாமா தொலைக்காட்சியின் புலனாய்வு பிரிவு நடத்திய கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்திடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்தாலும், தண்டனை விகிதம் 0.2 சதவிகிதம் என மோசமாகவே உள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் 21,900 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, புதிதாக சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, நாடு முழுவதும் தினமும் சுமார் 12 பெண்கள் அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுள்ளதை இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கவுரவ கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தின. பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 4 ஆண்டுகளில் 1,957 கவுரவக் கொலைகள் பதிவாகியிருப்பதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...