Johnston Fernando
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜோன்ஸ்டன் உட்பட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை!

Share

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் கடவுசீட்டுக்களையும் கையகப்படுத்துமாறும், வெளிநாட்டு பயணங்களுக்கு தடைவிதித்தும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு, சதொச பணியாளர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி, 59 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக அரசாங்கத்திற்கு பண இழப்பை ஏற்படுத்தியமைக்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ, மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தலா ஒவ்வொருவரையும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா ஐந்து இலட்சம் ரூபாபெறுமதியான இரு சரீரப்பிணைகளிலும் செல்வதற்கு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...