310390480 437635984935799 1390139617793621460 n
சினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

அஜித்தின் ‘துணிவு’ படப்பிடிப்பில் பிக்பாஸ் ஜோடி: வைரல் புகைப்படங்கள்

Share

அஜித் நடித்துவரும் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

310523591 821007202666616 2467802512309672554 n

 

இந்த நிலையில் அஜீத்தின் ‘துணிவு’ திரைப்படத்தில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான அமீர்-பாவனிரெட்டி ஜோடி நடித்து வருவதாகவும், தாய்லாந்து படப்பிடிப்பில் அமீர்-பாவனி இணைந்து உள்ளனர் என்றும் தகவல் வெளியானது.

311008044 815389556281834 8089389694759320182 n

இந்த நிலையில் தற்போது அஜித்துடன் அமீர்-பாவனி ஜோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானதையடுத்து இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. அட்டகாசமாக இருக்கும் இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.மேலும் இன்னொரு புகைப்படத்தில் அஜித், அமீர், பாவனியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்னொரு போட்டியாளரான சிபி சக்கரவர்த்தியின் உள்ளார் என்பதால் அவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

310785293 643432417179943 719097101252306878 n

 

எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படத்தில் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொகைன், உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

#cinemanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
05 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வரி செலுத்துவோருக்கு ‘கோல்ட், சில்வர்’ கார்டு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்திய புதிய அதிரடி சலுகைத் திட்டம்!

நாட்டின் வரி செலுத்தும் கலாசாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தமது வரிப் பொறுப்புக்களைத் துல்லியமாகவும்,...

04 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிவுல் ஓயா திட்டம்: நில அபகரிப்பிற்கு எதிரான கூட்டுப் போராட்டம் – யாழ். ஊடக அமையத்தில் சிவில் சமூகம் தீர்மானம்!

யாழ். ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான முக்கியத்துவமிக்க திறந்த...

03
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகள்: தமிழக அரசின் குரல் என்றும் ஒலிக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளின் நலனைப் பேணுவதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை...

02
செய்திகள்உலகம்

2 நாட்களில் பயணம்: நிலவில் சுயசார்பு நகரம் அமைக்க ஈலோன் மஸ்க் அதிரடி திட்டம்!

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தலைவர் ஈலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு...