நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யும் அரச வேலைத்திட்டத்தின் முதலாவது வீடு 40,000 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு டொலர் செலுத்தி கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெற்றுக்கொண்டால் 10% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் வியாட்புர வீடமைப்புத் தொகுதியில் 02 படுக்கையறைகள் கொண்ட வீடொன்றை இலங்கை ரூபாவிற்கு 142 இலட்சம் ரூபா பெறுமதியில் 40,000 அமெரிக்க டொலருக்கு வாங்கியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment