unnamed
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

Share

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த கோணேஸ்வரன் ஹரிபிரணவன் (வயது 29) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் தலைமைப்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் வேலையை முடித்துக்கொண்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஊரெழு பகுதியில் விபத்துக்கு உள்ளானார்.

விபத்துக்கு உள்ளவரை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் , கடந்த மூன்று மாத கால பகுதியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...