sterling pound
இலங்கைசெய்திகள்

ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதியில் வீழ்ச்சி!

Share

அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாக்குறுதியளித்தமைக்கு அமைய, பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பாரிய வரிக் குறைப்புகளைத் தொடர்ந்து ஸ்டெர்லிங் பவுண்டின் மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், 1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய அரசாங்கத்தின் வரிக்குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் பவுண்டின் மதிப்பு கடுமையாகக் குறைந்துள்ளது.

அதற்கமைய ஆசிய சந்தையில் ஒரு ஸ்டெர்லிங் பவுண்டின் விலை 1.038 டொலர்களாக காணப்பட்டதுடன், அதன் பெறுமதி 4 சதவீத்தால் சரிந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் வெள்ளிக்கிழமை சந்தை நிலவரத்துக்கு அமைய 401.58 ரூபாயாக காணப்பட்ட ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை இன்றையதினம் 376.70 ரூபாயாகக் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன், வெள்ளிக்கிழமையன்று 417.39 ரூபாயாக காணப்பட்ட விற்பனை விலையும் 391.95 ரூபா என்ற அளவுக்கு இன்றையதினம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...