பிரித்தானியப் பிரஜாவுரிமையுடைய ஈழத் தமிழரான தொல்காப்பிய ஆய்வுரை ஆசிரியர் சுந்தரம்பிள்ளை சிவச்சந்திரன் கடந்த செவ்வாய்க்கிழமை (20) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு விஜயம் செய்து பெறுமதியான நூல்கள் பலவற்றைக் கையளித்தார்.
பல்கலைக்கழக ஆய்வு மற்றும் வெளியீட்டு அலகின் பாவனைக்கென பத்துபாட்டு, எட்டுத் தொகை, பன்னிரு திருமுறை நூல்கள் உட்பட பல பெறுமதியான நூல்களை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் கையளித்தார்.
#SriLankaNews
Leave a comment