Capture 6
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

வாழைப்பூவை வைத்து10 நிமிடத்தில் சூப்பரான ஒரு கிரேவி! செய்வது எப்படி?

Share

வாழைப்பூவை வாரத்தில் ஒருமுறையாவது கட்டாயமாக வாழைப்பூவை நம்முடைய சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது. அந்தவகையில் வாழைப்பபூவை வைத்து செய்யக்கூடிய சூப்பரான கிரேவி ஒன்றை இங்கே எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

Capture 6

தேவையானவை

  • வாழைப்பூ – 2
  • வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
  • வர மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • பட்டை – 1
  • கிராம்பு – 2
  • தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
  • எள்ளு – 1 ஸ்பூன்
  •  எண்ணெய்  – 2 ஸ்பூன்
  • நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு
  • கருவேப்பிலை – 1 கொத்து
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
  • தக்காளிப் பழம் – 1
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
  • தேவையான அளவு – உப்பு

செய்முறை

முதலில்  பெரிய கைப்பிடி அளவு வாழைப்பூவை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது வாழை பூவை உதிர்த்த பின்பு உள்ளே இருக்கக்கூடிய அந்த வாழைப்பூ 2 கைப்பிடி அளவு தேவை.

சுத்தம் செய்த வாழைபூவை கொஞ்சம் பொடியாக வெட்டி மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அது கருத்து போகாமல் இருக்கும். இது அப்படியே இருக்கட்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன், வர மல்லி – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், பட்டை – 1, கிராம்பு – 2, இந்த பொருட்களை எல்லாம் மணக்க மணக்க வறுத்து விட்டு இறுதியாக தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன் போட்டு வறுத்து, அடுப்பை அணைப்பதற்கு முன்பு எள்ளு – 1 ஸ்பூன் சேர்த்து படபடவென பொரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த எல்லா பொருட்களையும் ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, கருவேப்பிலை – 1 கொத்து, பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

வெங்காயம் வதங்கி வந்தவுடன் பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம் – 1, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், சேர்த்து தக்காளி பழத்தை நன்றாக வதக்கி விட்டு தேவையான அளவு – உப்பு போட்டு, நறுக்கி வைத்திருக்கும் வாழைப்பூவை இதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இரண்டு நிமிடம் போல வாழைப்பூ வதங்கியவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை இதில் ஊற்றி, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து வாழைப்பூவை வேகவைத்து அடுப்பை அணைத்தால் சூப்பரான வாழைப்பூ கிரேவி மணக்க மணக்க தயார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...