saman ekanayake
அரசியல்இலங்கைசெய்திகள்

கழிவகற்றலை துரிதப்படுத்த விசேட குழு!

Share

அரச நிறுவனங்களில் குவிந்துள்ள பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை (Scrap Material) அகற்றுவதை துரிதப்படுத்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை அகற்றும் முழு செயல்முறையையும் மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட 2022 இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய இந்த செயல்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

திறைசேரியின், கொம்ப்ரோலர் ஜெனரல் அலுவலகத்தின், கொம்ப்ரோலர் ஜெனரல் ரம்யா காந்தியின் தலைமையில், இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, திறைசேரியின், அரச நிதித் திணைக்கள, மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.யு. சந்திரகுமாரன் மற்றும் திறைசேரியின், அரசுடமை நிறுவனத் திணைக்கள, மேலதிக பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.எஸ்.என். ஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை உரிய நேரத்தில் அகற்றாததால் அரசாங்கத்துக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், இதுபோன்ற பொருட்களால், அலுவலக வளாகங்கள் மற்றும் அரச கட்டிடங்களில் உள்ள இடவசதி குறைந்துள்ளது. எனவே குறித்த பொருட்களை உடனடியாகவும் முறையாகவும் அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் இந்தக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

பின்வரும் வழிமுறையைப் பின்பற்றி பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை அகற்றும் நடைமுறையை நிறைவு செய்யுமாறு குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

• அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் வழங்குதல்.

• நிறுவனங்களினால் (அமைச்சுகள்/ திணைக்களங்கள்/ நிறுவனங்கள்) குவிந்துள்ள
பயன்படுத்த முடியாத (கழிவுப்) பொருட்களை அடையாளம் காணுதல்.

• நிறுவனங்களினால், அகற்றப்பட வேண்டிய பொருட்களின் பட்டியலைத் தயாரித்தல்.

• ஒவ்வொரு நிறுவனமும் குறித்த மதிப்பீட்டு சபையொன்றை நியமித்தல்.

•ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் அகற்றப்பட வேண்டிய பொருட்கள் தொடர்பில் மதிப்பிடப்பட்ட அளவுகளின் பட்டியல்களைப் பெறுதல்.

• அகற்றல் செயல்முறையை கண்காணித்தல்.

• விற்பனைக்குப் பிறகு பொருட்கள் அகற்றுவதை உறுதி செய்தல்.

•அனைத்து நிறுவனங்களின் பயன்படுத்த முடியாத (கழிவுப்) பொருட்களையும் அகற்றுவது தொடர்பில் ஒருங்கிணைந்த அறிக்கையை தயாரித்தல்.

இதன்படி, 2022 டிசம்பர் மாதம் 05ஆம் திகதி அல்லது அதற்கு முன், பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை அகற்றும் பணிகளை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...