” விமல் வீரவன்ச தலைமையில் இன்று உதயமாகவுள்ள புதிய அரசில் கூட்டணி அரசாங்கத்துக்கு எந்த விதத்திலும் தாக்கமாக அமையாது.” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இது புதிய அரசியல் கட்சிகளை உருவாக்கவோ, கூட்டணி அமைக்கவோ, ஏற்கனவே உள்ள கட்சிகளை வலுப்படுத்துவதற்கான நேரமே இல்லை. இத்தருணத்தில் மக்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும்போது, புதிய அரசியல் கட்சிகளையோ, கூட்டணிகளையோ உருவாக்குவதற்கு இதுபோன்ற சூழலைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு மக்கள் சார்பாக நேர்மையாகப் பணியாற்றுவதும், பயனுள்ள பங்களிப்பைச் செய்வதும் காலத்தின் தேவையாகும்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment