” புலிகளுக்காக குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்கிறார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கப்பட்டதுபோல, புலிகள்மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளாரே என ஊடகவியலாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, பொன்சேகா இவ்வாறு காட்டமாக பதிலளித்தார்.
” புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு விக்னேஸ்வரன் முற்படுகின்றாரா, அவருக்கு வயதுபோய் விட்டது, நீதியரசர் பதவியை வகித்த ஒருவர் அவர். எதற்காக இப்படி கதைக்கின்றார், அவருக்கு பைத்தியமாக இருக்க வேண்டும். அவர் கூறும் வழியில் எமக்கு டொலர் தேவையில்லை.” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment