ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 7 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனினும், தேவைப்பட்டால் ரஞ்சன் ராமநாயக்கவை தேர்தலில் நிற்க அனுமதிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“ ரஞ்சன் தேர்தலில் போட்டியிடுவது தற்போது சாத்தியமில்லை. சட்டப்படி 7 ஆண்டுகளுக்கு அது சாத்தியமில்லை. எனினும், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு வழங்கப்படலாம்.
இது போன்ற இரண்டு சந்தர்ப்பங்களில் பீல்ட் மார்ஷலுக்கும் வழங்கப்பட்டது. முதலில், தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அப்போது முழு சுதந்திரம் வழங்கப்படும். அது காலத்தை பொறுத்தே உள்ளது.” என்றும் விஜயதாச குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment