IMG 20220826 WA0055
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொன்னாலை விபத்தில் கர்ப்பிணி உயிரிழப்பு!

Share

மோட்டார் சைக்கிளில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொன்னாலை பாலத்திற்கு அருகில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை சேர்ந்த ஜெயந்தன் தேவப்பிரியா (வயது 23) என்றே பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கர்ப்பமாக உள்ள நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக காரைநகரில் இருந்து மூளாய் வைத்திய சாலைக்கு மோட்டார் சைக்கிளில் கணவனால் அழைத்து செல்லப்பட்ட நிலையில், குறித்த பெண் பொன்னாலை பாலத்தடியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...