WhatsApp Image 2022 08 20 at 1.00.01 PM 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தொழிலுக்கு சென்றவர்கள் மீது தாக்குதல்! – நால்வர் கைது

Share

பொகவந்தலாவ பகுதியில் இருந்து பலாங்கொடைக்கு தொழில்நிமித்தம் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் பின்னவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ கெம்பியன் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு இழக்காகியுள்ளனர்.

பலாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலுக்கு சென்று மீள திரும்பியவர்கள் மீது நேற்று இரவு (19.08.2022) பலாங்கொடை மாரதென்ன தோட்டப் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஐவர் பலாங்கொடை வைத்தியசாலையிலும், ஒருவர் இரத்தினபுரி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பின்னவல பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் பயணித்த பஸ்ஸை பலாங்கொடை மாரதென்ன தோட்டப் பகுதியில் வைத்து மறித்து சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைந்த நிலையில் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (20.08.2022) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பின்னவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...