maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

சி.ஐ.டி.யில் மைத்திரி!

Share

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த ரோயல் பார்க் படுகொலை குற்றவாளி ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை மையப்படுத்தி சி.ஐ.டியில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

இராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து 2005 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 19 வயதுடைய இவோன் ஜொன்சன் எனும் யுவதியை அவர் அணிந்திருந்த காற்சட்டையைக் கொண்டு கழுத்தை நெரித்தும், தலையைத் தரையில் அடித்து மண்டையோட்டை 64 இடங்களில் சேதப்படுத்தியும் கொடூரமாகப் படுகொலை செய்த ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், அந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே 2019ஆம் ஆண்டு அவருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டிருந்தது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செய்திகள்அரசியல்இலங்கைஏனையவை

கல்வி அமைச்சு முன் விமல் வீரவங்சவின் அதிரடி சத்தியாக்கிரகம்: ஹரிணி அமரசூரியவின் பதவி விலகலை வலியுறுத்திப் போராட்டம்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையில் இன்று (12)...

26 6964df8a83bee
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முரசுமோட்டையில் கோர விபத்து: 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி; ஒருவர் படுகாயம்!

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் முரசுமோட்டை நரசிம்மன் கோவிலுக்கு அருகில் இன்று (12) மாலை...

Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...