கப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் சசி ராஜமகேந்திரனிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுமார் எட்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் வீடு இருக்கும் இடத்தை சிரச தொலைக்காட்சி தொடர்ந்து கூறியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்த செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை சசி ராஜமகேந்திரனிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க ஜூலை 09 ஆம் திகதி இரண்டு தடவைகள் சிரச அலைவரிசையுடன் தொடர்பு கொண்டு தனது வீடு இருக்கும் இடத்தை வெளியிட வேண்டாம் என கோரியதாக குறிப்பிடப்படுகின்றது. சசி ராஜமகேந்திரன் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதோடு, சிரச அலைவரிசையின் மேலும் பல தலைவர்களும் வாக்குமூலங்களைப் பெற அழைக்கப்படவுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment