ஸ்ரீபால டி சில்வா
அரசியல்இலங்கைசெய்திகள்

நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டு! – விசாரணைகள் ஆரம்பம்

Share

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஊழலுக்கு எதிரான முன்னணியினர் மேற்படி ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டுக்கமையவே நேற்று அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காக அவர் விரைவில் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் ஜப்பானின் தாய்சே நிறுவனத்திடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கும் சம்பவம் தொடர்பில் மேற்படி முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த விடயம் தொடர்பில் இந் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதுவர் காரியாலய அதிகாரிகளிடமும் விடயங்களைப் பெற்றுக்கொள்வதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...