சிக்கியது 29,900 மெற்ரிக் தொன் சீனி!!
களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 29 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட குறித்த சீனி அரசுடைமையாக்கப்பட்டுள்ளது என அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த தொகை சீனி கட்டுப்பாட்டு விலையில், அரச மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களின் ஊடாக மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Leave a comment