galle face green 3 largejpg
இலங்கைசெய்திகள்

அனுமதி பெற்றே காலிமுகத்திடலை பயன்படுத்தலாம்!

Share

நான்கு மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்கள் பயன்படுத்திய காலிமுகத்திடல் பகுதியை இனி நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மாத்திரமே பொது நிகழ்வுகளுக்கு பயன்படுத்த முடியும் என அதிகாரசபை அறிவித்துள்ளது.

அத்துடன் முன்னர் போராட்டங்களுக்காக அறிவிக்கப்பட்ட ‘ஆர்ப்பாட்ட இடமும்’ இனி இருக்காது. இனி போராட்டங்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

இந்த நிலம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் அரசாங்கத்துக்கும் சொந்தமானது. இந்தப் பகுதியில் புல் நடுகை செய்திருந்தோம். ஆனால் இப்போது அழிந்துள்ளது. இந்த நிலத்தை மீள புல் தரையாக மறுசீரமைக்கவுள்ளோம்.

இந்த காணியை எந்தவொரு தரப்பினருக்கும் குத்தகைக்கு வழங்கவோ அல்லது முதலீட்டுக்கு ஒதுக்கவோ திட்டம் இல்லை எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 11
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல்: முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ‘எயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி...

15 11
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: FBI அறிக்கையை மேற்கோள் காட்டி சஞ்சீவ எதிரிமான்ன விளக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தேவாலயங்களைக் காட்ட சுரேஷ் சலே போன்ற ஒருவரின் உதவி...

14 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்: இயந்திரங்களுக்குச் சேதமில்லை என கோப் (COPE) குழு உறுதி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியினால், அங்குள்ள மின் உற்பத்தி...

13 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மொரட்டுவையில் திருமண நாளன்று இளைஞர் கொலை: மூவர் கைது!

மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை...