202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சங்கிலி திருடியவர் கைது!

Share

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 லட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தாயாரிடமிருந்த கைக்குழந்தை அழுத்தால் தான் பார்ப்பதாக கூறிய மற்றொரு பெண் குழந்தையை வாங்குவதாக பாசங்கு செய்து தாயார் அணந்திருந்த சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பித்துள்ளார்.

சங்கிலியை பறிகொடுத்த பெண் நல்லூர் உற்சவகால பொலிஸ் பிரிவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அராலியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொள்ளையிட்ட நகையும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...