1745436 rusti1
உலகம்செய்திகள்

பிரபல எழுத்தாளர் மீது கத்திக்குத்து! – சந்தேக நபர் கைது

Share

1988ஆம் ஆண்டு, சாத்தானின் வசனங்கள் என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திகுத்து தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30 வருடங்களாக மரண அச்சுறுத்தலில் இருந்து வந்த இந்திய – பிரித்தானிய நாவலாசிரியர், சல்மான் ருஸ்தி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் நடந்த மேடை நிகழ்வொன்றில் வைத்து கத்தியால் குத்தப்பட்டார். சந்தேகநபர், மேடைக்கு சென்று, ருஷ்டியையும் அவரை நேர்காணல் செய்பவரையும் தாக்கியதாக நியூயார்க் பொலிஸ் தெரிவித்துள்ளது.

16603881812027

கழுத்து மற்றும் வயிற்றில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான அவர் இலக்காகி படுகாயம் அடைந்த சல்மான் ருஷ்டி, ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபர் 24 வயதான ஹடி மடர் என்பதும், நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதலில் அதிக ரத்தத்தை இழந்த சல்மான் ருஷ்டி செயற்கை சுவாசக் கருவியுடன் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிக இரத்த இழப்பை சந்தித்துள்ள அவர் ஒரு கண்ணை இழக்க நேரிடும் என்பதுடன் அவரது கையில் நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மற்றும் அவரது கல்லீரல் குத்தப்பட்டு சேதமடைந்துள்ளது என அவரது பிரதிநிதியான ஆண்ட்ரூ வைலி தெரிவித்துள்ளார். எனினும் தாக்குதலுக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சல்மான் ருஷ்டி 1988-ம் ஆண்டு வெளியிட்ட தி சடனிக் வர்சஸ் (The Satanic Verses) என்ற புத்தகம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 1988இல் வெளியிடப்பட்ட, இறைதூதர் நபி நாயகம் தொடர்பான சாத்தானின் வசனங்கள் என்ற நாவலை எழுதிய பிறகு பல ஆண்டுகளாக அவர் மரண அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தார்.

இந்தியாவில் பிறந்த நாவலாசிரியர் ருஷ்டி 1981இல் மிட்நைட்ஸ் சில்ட்ரன் மூலம் புகழ் பெற்றார், இங்கிலாந்தில் மட்டும் இந்த நாவலின் ஒரு மில்லியன் பிரதிகள் விற்பனையாகின.
எனினும் 1988இல் அவரது நான்காவது நாவலான – சாத்தானிக் வசனங்கள் – காரணமாக கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அவர் மறைந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த நாவல் சில முஸ்லிம்கள் மத்தியில் சீற்றத்தைத் தூண்டியது, அதன் உள்ளடக்கம் தெய்வ நிந்தனை என்று கருதி, சில நாடுகளில் அது தடை செய்யப்பட்டது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...