udayanga
அரசியல்இலங்கைசெய்திகள்

உதயங்க கோரிக்கை நிராகரிப்பு! – CID யில் முன்னிலையாக பணிப்பு

Share

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க, வெளிநாடு செல்ல முன் வைத்த கோரிக்கையை கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் நேற்று இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சர்ச்சைக்குரிய மிக் விமான ஊழலில் சந்தேக நபர்களில் ஒருவராக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்நிலையி்ல் வெளிநாட்டில் நடைபெறவுள்ள கருத்தரங்கொன்றில் கலந்து கொள்ள அனுமதி வழங்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நகர்வு மனுவொன்றின் மூலம் உதயங்க வீரதுங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எனினும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் முழுமையாக இல்லை என்ற காரணத்தைக் காட்டி உதயங்க வீரதுங்க இதுவரை முழுமையான வாக்குமூலம் வழங்கவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது.அதன் காரணமாக அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டால் வழக்கு விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்று பொலிஸார் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உதயங்க வீரதுங்கவின் வெளிநாடு செல்வதற்காக முன் வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

அத்துடன் இவ்விசாரணைகளுக்கு முழுமையான வாக்கு மூலம் ஒன்றினை வழங்க எதிர்வரும் 17 ஆம் திகதி சி.ஐ.டி.யில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...