c373be9e 57749896 101
செய்திகள்உலகம்

3 மில்லியன் தடுப்பூசிகளை நிராகரித்தது வடகொரியா!!

Share

நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 3 மில்லியன் கொவிட் – 19 தடுப்பூசிகளை வடகொரியா நிராகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலகில் நிலவிவரும் தடுப்பூசிக்கான தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, கொவிட்-19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடொன்றுக்கு அவற்றை வழங்குமாறு வட கொரியா கோரிக்கை விடுத்துள்ளது எனவும் ஐ.நா சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொவக்ஸ் திட்டத்தின் கீழ், சீனாவில் தயாரிக்கப்பட்ட சினொவெக்ஸ் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு நன்கொடையாக வழங்கப்படவிருந்தன. இந்த நிலையிலேயே வடகொரியா மேற்படி தெரிவித்துள்ளது.

இதேவேளை. கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி வரை வடகொரியாவில் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 37 ஆயிரத்து 291 பேருக்கும் காய்ச்சல் போன்ற நோய்கள் காணப்பட்டவர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனாத் தொற்று உறுதியாகவில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் அதன் வாராந்த அறிக்கையில் கூறியுள்ளது.

உலகலாவிய ரீதியில் கொரோனாத் தொற்று ஆரம்பமாகியவுடனேயே, அதற்கெதிராக மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளை வட கொரியா அமுல்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...