மந்திரத்திலேயே காயத்ரி மந்திரம் சக்தி வாய்ந்த மந்திரம்.
ஓம் பூ, புவ, ஸ்வஹ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோயோந ப்ரசோதயாத்
இதுதான் அந்த காயத்ரி மந்திரம்.
யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன் என்பதே இதன் அர்த்தம்.
காயத்ரி மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும். தினமும் காயத்ரி தேவியை நினைத்து இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு ஆத்மசுத்தி கிடைக்கும்.
இந்த மந்திரத்தை சொல்பவர்கள் ஒழுக்க நெறியுடனும், உள்ளத் தூய்மையுடனும் இருக்க வேண்டும். காயத்ரி மந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பின் தினமும் சொல்வது சிறந்ததாகும்.
யாக சாலையில் அமர்ந்து காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும். வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து 27 முறை உள்முகமாகக்கூற 27,000 முறைக்குச் சமம் என்பதால் சுத்தமான அறையில் அமர்ந்து மந்திரத்தைக்கூறி அனைத்து செல்வங்களையும் அடையலாம்.
#jothidam
Leave a comment