20220525 135403 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கறுப்பு சந்தை வியாபாரிகளாலே மாலையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பூட்டு!

Share

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவுகளில் குழப்பங்கள் , விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதனால் மாலைவேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழில் இயங்கும் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாலை வேளையுடன் மூடப்படுகின்றன. அது தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இருந்தேன்.

அதன் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாலை வேளைகளில் மது போதையில் கூடுபவர்கள் , கறுப்பு சந்தை வியாபாரிகள் , எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவதுடன் , விரும்பத்தகாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகிறது. ஆகவே தாம் மாலை வேளையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் , அப்பகுதி பிரதேச செயலர் ஆகியோரின் முடிவின் பிரகாரம் மாலையுடன் மூடுவதா இல்லையா என முடிவெடுக்கப்படும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...