153224 strike
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கு விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களால் சுகவீன விடுமுறை போராட்டம்!

Share

வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வடக்கு மாகாண ஆளுநர் ஊடகங்களுக்கு செய்தி வழங்கியமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வடக்கு மாகாண விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களினால் அடையாள கவனயீர்ப்பு சுகவீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேற்படி விடயம் தொடர்பாக நேற்றைய (08) பத்திரிகைகளில் மாகாண விவசாயத் திணைக்களம் சார்பாகவும் மாகாண விவசாயப் பணிப்பாளர் தொடர்பாக தங்களால் வெளியிடப்பட்ட செய்தியில் மாகாண விவசாயத் திணைக்களத்தின் மீது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தில் ஆளணி முகாமைத்துவ சேவைத் திணைக்களத்திளால் அனுமதிக்கப்பட்ட ஆளணியில் உயர்பதவியான மாகாண பணிப்பாளர் பதவியானது இலங்கை விவசாய சேவையின் தரம் 1 இற்கு உரித்துடையது என்பதுடன் அதற்கு உயர்வான இலங்கை விவசாய சேவையின் விசேட தரத்தில் ஆளணிகள் எவையும் உருவாக்கப்படவில்லை. இதன் விளைவாகவே இவருக்கான பதவியுயர்வானது வழங்கப்படவில்லை என்பது எமது அறிவுக்கு எட்டியவரை உண்மையாகும்.

வடக்கு மாகாணத்தில் இலங்கை விவசாய சேவையின் விசேட தரத்திற்கான ஆளணி உருவாக்கல் எவையும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் நாமறிந்த வரையில் எமது விவசாயப் பணிப்பாளருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு அவரால் நிராகரிக்கப்பட்டோ அல்லது பதவியுயர்வுகள் வழங்கப்பட்டு அவரால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையோ காணப்படவில்லை.

இந்நிலையில் அவருக்குரிய பதவியானது மீளப்பெறப்பட்டதானது அரச உத்தியோகத்தர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தி அவமதிப்பதாகவே அரச உத்தியோகத்தர்களான நாம் மிகவும் மனவேதனை அடைகின்றோம்.

மேலும் தங்களால் வழங்கப்பட்ட குறித்த செய்தியில் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் பல ஆண்டுகாலமாக இப்பதவியில் உள்ளதாகவும், வேறு மாகாணங்களில் குறித்த நடைமுறை அவதானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஏனைய மாகாணங்களின் விவசாயத் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர்களாக நீண்ட காலமாக இருந்தமையும், இருக்கின்றமையும் பலரும் அறிந்த விடயமே.எமது மாகாணத்திற்கு மட்டும் இந்நடைமுறை பின்பற்றுவதும், எமது மாகாண பணிப்பாளருக்குரிய இடமாற்றமோ பதவியுயர்வோ வழங்கப்படாததும் அவரின் குற்றமன்று என நாம் கருதுகின்றோம். குறித்த உத்தியோகத்தருக்கு உரித்தான பதவியுயர்வையோ பதவிக்கான நியமனத்தையோ வழங்காது பதவி மீளப்பெறலானது அநீதியான செயற்பாடு என நாம் கருதுகின்றோம்.

மேலும் வடக்கு மாகாணத்தின் ஏனைய திணைக்களங்களிலும் துறைசார் திணைக்களத் தலைவர்கள் அதிக காலம் துறைசார் பதவிகளில் பதவி வகிப்பதனையும் நாமறிந்துள்ளோம்.எனவே எமது மாகாண விவசாயப் பணிப்பாளருக்கு ஏற்பட்ட அபகீர்த்தியினை துடைத்து அவரால் வழங்கப்பட்ட அர்ப்பணிப்பான மற்றும் புனிதமான சேவையினை மதித்து அவருக்குரிய, நீதியை வழங்குமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம். இதற்கு அடையாளமாக எம்மால் எமது வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் சார்பாக நாளை (இன்று) கவனயீர்ப்பு சுகவீன விடுமுறையினை மேற்கொள்ளகின்றோம் என்பதனை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றோம். – என்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...