ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியிலுள்ள ராஜா ஹம்சிகா மண்டபத்தின் சதானந்தம் அரங்கில் இடம்பெற்றது.
இதன்போது மங்கள விளக்கேற்றப்பட்டு புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
புளொட்டின் சர்வதேச கிளைகளின் ஆலோசகர் கிருஸ்ணன் மற்றும் மாநாட்டிற்காக தமிழகத்தில் இருந்து வருகைதந்த தி.முக. அகில இந்திய தொழிற்சங்க தலைவர் கரூர் கண்ணதாசன் ஆகியோர் புளொட் தலைவர் சித்தார்த்தனால் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டனர்.
கட்சியின் செயலாளர் நா.இரட்ணலிங்கம் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை தேசிய மாநாட்டில் கட்சியின் பிரகடனமாக அறிவித்தார்.
இந்த மாநாட்டில் இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா,தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் செயலாளர் சிறீதரன் , மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
மேலும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், க.சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரும் புளொட்டின் உள்நாட்டு வெளிநாட்டு முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியினுடைய அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டர்.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் மாநாட்டிற்கு வருகை தராத போதும் அவருடைய வாழ்த்துரை மாநாட்டின்போது வாசிக்கப்பட்டது.
#SriLankaNews
Leave a comment