1741852 cover
சினிமாபொழுதுபோக்கு

இளம் ஹீரோக்களுக்கே சவால்விடும் பார்த்திபன்! -வைரலாகும் வீடியோ

Share

இரவின் நிழல் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன்.

பார்த்திபன் இயக்கி நடித்து அண்மையில் வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தில், பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை ‘இரவின் நிழல்’ திரைப்படம் பெற்றுள்ளது.

இந்த திரைப்படம், தமிழக முதல்வர் மற்றும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரின் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளமை அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளார்.

இதற்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ள பார்த்திபன், இது தொடர்பான வீடியோவை தனது ருவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த வீடியோவில், “ஆடி ஆடி ஆடி ஆடி கூழ் ஊற்றி, Cool-ஆய் ஆடி ஆடி நாடி நரம்பெல்லாம் எனர்ஜி நல்லா கூடி கூடி கூடி ரெடி ஆகிறான் ப்ளடி அடுத்தப் படத்திற்கு. எப்டி?” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#cinema

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24088105 jana tri
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் கடைசி ஆட்டம்: எதிர்பார்ப்பை எகிறவைத்த ஜனநாயகன் டிரைலர் வெளியீடு!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், அவரது திரையுலகப் பயணத்தின்...

images 5 2
பொழுதுபோக்குசினிமா

தலைவர் 173: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியில் இணையும் ‘டான்’ இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில்...

f826ae523888053ebb5ed50ee1d53e8269218cef31578
சினிமாபொழுதுபோக்கு

ஜன நாயகன் முன்னோட்டத்திற்குத் திரையரங்குகளில் முன்பதிவு: விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் (Trailer) நாளை...

750x450 643120 parasakthi movie
பொழுதுபோக்குசினிமா

‘பராசக்தி’ படத்திற்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு: 10-ஆம் திகதி வெளியாவது உறுதி!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம்...