1741774 vellore
இந்தியாசெய்திகள்

ஏரியில் தண்ணீர் குடித்த 3000 வாத்துக்கள் உயிரிழப்பு!

Share

இந்தியா – ஆந்திர மாநிலத்தின் திருப்பதி அடுத்த கப்ப கூடகம் பகுதியை சேர்ந்தவர் ஒருவரின் 3 ஆயிரம் வாத்துக்கள் ஒரேதடவையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் 3 ஆயிரம் வாத்துக்களை வளர்த்து வந்தார். நேற்று காலை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரியில் 3 ஆயிரம் வாத்துக்களையும் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.

ஏரியில் இருந்த தண்ணீரை குடித்த 3 ஆயிரம் வாத்துகளும் திடீரென துள்ளி விழுந்து பரிதாபமாக இறந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏரியில் வளர்த்து வந்த மீன்களை பிடிப்பதற்காக அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு சிறிதளவு தண்ணீரில் மீன் பிடித்து உள்ளனர்.

ஏரியிலிருந்த தண்ணீரில் மர்ம நபர்கள் விஷத்தை கலந்து உள்ளனர். விஷம் கலந்த தண்ணீரை குடித்ததாலேயே வாத்துக்கள் இறந்தமை தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...