202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாய் சித்திரவதை செய்து கொலை! – புங்குடுதீவில் இருவர் கைது!

Share

புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்து சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்ட கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் முதன்மை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தார்.

நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியது.

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தில் இந்தச் சம்பவம் இரண்டு நாள்களுக்கு முன் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகேயின் உத்தரவில் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 மற்றும் 35 வயதுடைய இருவர் இன்று இரவு ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

நாயை வெட்டிக் கொல்லப் பயன்படுத்தி கைக்கோடாரி மற்றும் அதனை காணொளி எடுத்த அலைபேசி என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.

மிருக வதைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினார்.

நாயை வெட்டிக் கொன்றவர்களில் முதன்மை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகிறார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜப்பானியத் தேர்தலில் ட்ரம்ப்பின் நேரடித் தலையீடு: பிரதமர் சனாயே டகாயிச்சிக்கு முழு ஆதரவு!

ஜப்பானில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 08) நடைபெறவுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி...

Dr Harini Amarasuriyapng
செய்திகள்அரசியல்இலங்கை

ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் வசூலிக்க வேண்டாம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய கடும் உத்தரவு!

பாடசாலைகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஸ்மார்ட் பலகைகளுக்காக (Smart Boards) பெற்றோரிடம் நிதி வசூலிப்பதைத் தற்காலிகமாக அல்ல,...

images 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கரம் பலகை ஊழல் வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகள் மீதான தீர்ப்பு மார்ச் 25-க்கு ஒத்திவைப்பு!

சதோச நிறுவனம் ஊடாக கரம் மற்றும் தாயக்கட்டைகளை இறக்குமதி செய்ததில் 3.9 மில்லியன் ரூபாய் அரச...

articles2Fv9KiOKnKD5iVuoS2PJSS
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய அரசியலமைப்பு விவாதத்தை உடனே ஆரம்பியுங்கள் – அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம்!

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான தேசிய அளவிலான கலந்துரையாடலை அரசாங்கம் உடனடியாக ஆரம்பித்து, அதில் தீவிரமாகப் பங்கேற்க...