பாடசாலைகளுக்கு வழங்கப்படும் ஓகஸ்ட் மாத விடுமுறை இம்முறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நவம்பர் இறுதி வரை விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நவம்பர் 27 ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை நவம்பர் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.
#SriLankaNews
Leave a comment