சர்வக்கட்சி அரசில் இணைவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஜனாதிபதி ரணிலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அடுத்த இரு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ள ஜனாதிபதி, இது சம்பந்தமாக கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றார்.
இதற்கமைய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் நேற்று பேச்சு நடத்தினார். அக்கட்சியும் சாதக சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. சம்பிக்க ரணவக்கவும் சாதகமான நிலைப்பாட்டிலேயே உள்ளார்.
இந்நிலையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணியும், முஸ்லிம் காங்கிரசும் ரணிலுக்கு நேசக்கரம் நீட்டவுள்ளன.
மனோ கணேசன், திகாம்பரம், ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
#SriLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment