கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அரசுக்கெதிரான போராட்டத்தில் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களில் ஒருவர், ஜனாதிபதியின் கொடியை கழற்றி, அதனை அங்கிருந்த கட்டிலில் விரித்து, அதன் மேல் படுத்திருந்தார். அதனை வீடியோவாக ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பதவியேற்றியிருந்தார்.
அதுமட்டுமல்லாது அவர், ” நான் ஜனாதிபதியின் கொடியை, கட்டிலில் விரித்து படுத்து இருக்கின்றேன். எனக்கு கீழேயே கொடி இருக்கின்றது. ஆகையால், அவர் வீட்டுக்குப் போகவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட குறித்த நபரையே பொலிஸார் தேடி வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment