202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

650 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

Share

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் 650 கிலோ கேரளா கஞ்சாவுடன் மாதகலை சேர்ந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஊர்காவற்துறை கடற்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை ஈடுபட்டு இருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான படகினை சோதித்த போது 650 கிலோ கேரளா கஞ்சாவை படகில் இருந்து மீட்டனர்.அதனை அடுத்து படகில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ள கடற்படையினர் , விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் , கைது செய்யப்பட்ட இருவரையும் , அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கஞ்சாவையும் ஒப்படைக்கவுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...