20220719 114541 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் தரப்புகளுக்கு இது முக்கியமான தருணம்! – யாழ் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம்

Share

ஜனாதிபதி தெரிவின்போது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கருத்திற்கொண்டும் தமிழ் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெல்சின் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு – கிழக்கு தமிழ் தரப்புகளுக்கு இது ஒரு முக்கியமான தருணம். இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கருத்த்திற்க்கொண்டும் தமிழ் கட்சிகள் செயல்பட வேண்டும். நீங்கள் ஆதரிக்கும் வேட்பாளர் எமது தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் ஏற்கும் தருணத்தில் நடுநிலையாக செயல்படாமல் அந்த வேட்பாளருக்கு முழு ஆதரவை நீங்கள் வழங்க வேண்டுமென மாணவர் சமூகமாக நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நீங்கள் தமிழ் மக்களின் உண்மையான தேவைகளை புரிந்து இருப்பீர்கள் என நம்புகிறோம். காலங்காலமாக தமிழ் மக்கள் உங்களுடைய வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றம் அடைந்து இருக்கின்ற வேளையில் இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் செயலாற்றவேண்டும்.

தென்னிலையில் மக்கள் அனைவரும் இக்கட்டான சூழலிற்கு தள்ளப்பட்ட வேளையில் அவர்களின் தலைவர்களுக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். அதே நிலைமையை கருத்திற்க்கொண்டு உங்களுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் ஒரு காலகட்டத்தில் நம்பிக்கையை இழந்து செயல்படும் பட்சத்தில் மாணவர் சமூகமாக இருக்கின்ற நாங்கள் மக்களுடன் இணைந்து செயல்படுவோம் என சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறோம் – என்றார்.

இதேவேளை, தமிழ் அரசியல் கட்சிகள் இந்த விடயத்தில் கருத்து வேறுபாடுகளை விட்டு சிறந்த ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய செயலாளர் அபிராஜ் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...