இலங்கை
பஸ் நிலையத்தில் மர்மபொதியால் பரபரப்பு!
ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் இ.போ.ச. பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் உரிமையாளர் அற்ற – மர்ம பொதியொன்று இருந்ததால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொழும்பு பஸ் நிறுத்தப்படும் பகுதியிலேயே கறுப்பு நிறத்திலான உரைப்பை இருந்துள்ளது.
இது தொடர்பில் பயணிகள் சிலரால், டைம் கீப்பரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் வந்தனர். பஸ்களும், பயணிகளும் அகற்றப்பட்டனர்.
உரிய சோதனைகளின் பின்னர், பை திறக்கப்பட்டது. அதற்குள் ஆடைகள் இருந்துள்ளது. எவராவது பையை மறந்துவிட்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login