புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜூலை 19 ஆம் திகதி , ஜனாதிபதி பதவிக்கு வேட்புமனுக்கள் கோரப்படும் என்றும், பின்னர் ஜூலை 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
விசேட கட்சி தலைவர்கள் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போதே சபாநாயகர் இவ்வாறு கூறினார்.
#SriLankaNews
Leave a comment