IMG 8064 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள முடியாது!

Share

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற போராட்டத்திற்கு பின்னர் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில்,

வடக்கு கிழக்கிலே ஊடக அடக்குமுறை என்பது கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

வடகிழக்கிலே 39 ஊடகவியலாளர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

அதேபோல ஊடக நிறுவனங்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. கணிசமான ஊடகவியலாளர்கள் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள். இந்த நேரம்வரை ஊடகத்துறை என்பது ஒரு நெருக்கடியான துறையாகவே காணப்படுகின்றது.

இந்த நிலையில் தான் கொழும்பில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் மீண்டும் பதிவாகியுள்ளது. வடகிழக்கு ஊடகவியலாளர்களுக்கு பரீட்சயமாக இந்த தாக்குதல்கள் காணப்பட்டாலும் கொழும்பில் அது மீண்டும் எதிரொலிக்கிறது.

இந்த நிலையில் வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் மீதான காணாமலாக்கல், படுகொலைகள், அச்சுறுத்தல்கள் போன்ற செயற்பாடுகளை நாங்கள் எவ்வாறு கண்டித்தோமோ தற்பொழுது கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது.

அந்தவகையில் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் . தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அனைத்து மட்ட பிரச்சனைகளிலும் எமது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் நீண்டகாலமாக செயற்பட்டு வருகிறது.

அந்த வகையில் இச் செயற்பாடுகளின் போது ஊடகங்களினுடைய பங்களிப்பும் எமது கலைப்பீட மாணவர் ஒன்றியத்தோடு பின்னிப்பிணைந்ததாகவே காணப்படுகிறது.

ஆகவே இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதோ அச்சுறுத்தப்படுவதோ தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதனை அரச நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதனை யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமாக வலியுறுத்தி நிற்கின்றோம் – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...