nakammmttt
அழகுக் குறிப்புகள்

அழகிய வலிமையான நகங்களைப் பெற

Share

அழகிய வலிமையான நகங்களைப் பெற

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக விளங்குகின்றனர். அந்த வகையில் அழகு பராமரிப்பில் நகங்களுக்கு ஒரு பங்கு இருக்கத்தான் செய்கிறது.

தற்போது ட்ரெண்டிங்கில் பலவிதமான நெய்ல் ஆர்ட்கள் உள்ளன. இவற்றை செய்ய முதலில் வலிமையான தகுந்த நகங்கள் இருக்க வேண்டும். நகங்களை சரியாக பாதுகாத்தால் அற்புதகமான கலர் அடிக்கலாம் அல்லது நெய்ல் ஆர்ட் செய்துகொள்ளலாம்.

இதற்கு நகங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். நகங்களை பாதுகாப்பதன் மூலம் அழகிய நகங்களை பெறலாம்.

ஆரோக்கிய நகங்களைப் பெற செய்ய வேண்டியவை

ஆரோக்கியம் நிறைந்த உணவை உட்கொள்ளுதல் அவசியம். பேரிச்சம் பழம் கலந்து பால் அருந்தி வந்தால் நகம் நன்கு வளரும். அத்துடன் தினமும் முட்டையை உணவில் எடுத்துக்கொண்டால் நகங்களுக்கு புரோட்டீனும் சத்துக்களும் கிடைக்கும்.

நகங்கள் உடைவதைத் தவிர்க்க, தண்ணீரில் நீண்ட நேரம் கைகளை வைத்திருக்க வேண்டிய வேலைகளை செய்யும் போது கையுறை அணிந்துகொள்ளவும்.

நகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நகங்களை அடிக்கடி கடிக்கும் பழக்கமாகும். இது நகங்களை பெரிதும் பாதிக்கிறது. இரத்தக்கசிவு மற்றும் வலியை உருவாக்கும்.

நகங்களை வெட்டும் முன் தேங்காய் எண்ணெய்யை தடவி சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் அழகாக விரும்பும் வடிவத்தில் நகங்களைப் பெறலாம். நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியை உண்டுபண்ணிவிடும்.

கைகள் ஈரமாக இருக்கும்போது நகங்களை ஷேப் செய்வதை தவிருங்கள்.

ஆலிவ் ஒயிலை சூடு செய்து நகங்களில் வாரம் ஒருமுறை மசாஜ் செய்து வந்தால் நகங்கள் உடைவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

மாதம் ஒருமுறையாவது கை, கால்களில் மருதாணி இட்டுக் கொள்ளுங்கள். இதனால் நகத்துக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

நகத்துக்கு நகப்பூச்சு பயன்படுத்துவது உங்கள் நகங்களை பாதுகாக்கும். இது ஈரப்பதன் இழப்பை கட்டுப்படுத்துகிறது. ஆனால் நகப்பூச்சை அதிகளவில் பயன்படுத்தல் கூடாது.

முகத்துக்கு கொடுக்கும் கவனிப்பை நகத்துக்கும் கொடுப்போம். நகங்கள் அழகு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதும் கூட.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்குமருத்துவம்

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா? மூலிகையின் அரசி என்று அறியப்படும் துளசி செடியில் பல்வேறு...

20 12
அழகுக் குறிப்புகள்ஜோதிடம்பொழுதுபோக்கு

வீட்டில் எந்த திசையில் துளசிச் செடியை வைக்க வேண்டும் தெரியுமா….

அநேகமான மக்கள் வீடுகளில் துளசிச் செடியை வளர்ப்பார்கள். சிலர் வாஸ்துக்காகவும் இன்னும் சிலர் வீட்டில் நேர்மறையான...

15 21
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

முடி வளர்ச்சி மும்மடங்கு அதிகரிக்க வேண்டுமா..! இந்த ஒரு எண்ணெய் போதும்

அடர்ந்த நீளமான கூந்தலை தான் அனைத்து பெண்களும் விரும்புபவர்கள். முடி உதிர்வு என்பது ஆண், பெண்...

download 14 1 5
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர் !

சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர் ! சருமப் பராமரிப்புக்கான கிரீம்கள் மற்றும் அழகுசாதனப்...