1722125 1
சினிமாபொழுதுபோக்கு

இணையத்தை கலக்கும் ரம் பம் பம் ரீமேக்!

Share

22 வருடங்களின் பின் வெளியாகியுள்ள ரம் பம் பம் பாடல் இணையத்தளத்தை கலக்கி வருகிறது.

கமல்ஹாசன் மற்றும் குஷ்பூ நடிப்பில் வெளியான மைக்கல் மதன காம ராஜன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த பாடல் 22 வருடங்கள் கழித்து ரீமேக் செய்யப்பட நிலையில், மீண்டும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அரண்மனை 3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல்.

இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதைத்தொடர்ந்து இந்தப் படத்திலிருந்து ரம் பம் பம் பாடல் ஜூன் 1 மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ரம் பம் பம் பாடல் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் மைக்கேல் மதன காமராஜன் படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...