6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்விளையாட்டு

வடமாகாண சட்டத்தரணிகள் கிரிக்கெட் அணிக்கு வெற்றி!

Share

வடமாகாண சட்டத்தரணிகள் கிரிக்கெட் அணியினருக்கும் வடமாகாண வைத்தியர் கிரிக்கெட் அணியினருக்குமிடையிலான கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது.

சட்டத்தரணிகள் அணிக்கு நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் அவர்களும்,வைத்தியர் அணிக்கு புற்றுநோய் சத்திரசிசிச்சை நிபுணர் கணேசமூர்த்தி சிறிதரன் அவர்களும் தலைமை தாங்கினர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம் பெற்ற இப்போட்டியில் வைத்தியர் அணி நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

நிர்ணயிக்கப்பட்ட 35 பந்து பரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 206 ஓட்டங்களை வைத்தியர் அணி பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பில் அணித்தலைவர் வைத்தியர் கணேசமூர்த்தி சிறிதரன் 39 ஓட்டங்களையும்,வைத்தியர் ரஜீவ் நிர்மலசிங்கம் 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் சட்டத்தரணிகள் அணி சார்பில் சட்டத்தரணி த.அஞ்சனன் 3 விக்கெட்டுக்களையும், சட்டத்தரணி இராசையா இளங்குமரன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 207 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சட்டத்தரணிகள் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 20.3 பந்து பரிமாற்றங்களில் 207 ஓட்டங்களை பெற்று வெற்றியை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் (யாழ்.மாநகர முதல்வர்) அதிரடியாக 72 ஓட்டங்களையும் சட்டத்தரணி த. அஞ்சனன் அபாரமாக 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் வைத்தியர் அணி சார்பில் வைத்தியர் கௌரிபாகன் 2 விக்கெட்டுக்களையும், வைத்தியர் ரஜீவ் நிர்மலசிங்கம் 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாகவும் சிறந்த பந்துவீச்சாளராகவும் சகல துறைகளிலும் பிரகாசித்த சட்டத்தரணி த. அஞ்சனன் அவர்களும் சிறந்த களத்தடுப்பாளராக வைத்தியர் ரஜீவ் நிர்மலசிங்கம் அவர்களும் சிறந்த துடுப்பாட்ட வீரராக வி. மணிவண்ணணும் தெரிவு செய்யப்பட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 194
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: அடுத்த சுற்றுக்கான ஆயத்தப்பணிகளில் பாகிஸ்தான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்...

world 193
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலப்பகுதியில் சாலை விபத்துகள்: 44 பேர் உயிரிழப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 10 முதல் 15 ஆம்...

world 192
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் மூன்று இலங்கைச் சிறுத்தைக்குட்டிகள்: 30 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த அரிய நிகழ்வு!

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் கடந்த ஜனவரி 1-ஆம் திகதி பிறந்த மூன்று இலங்கைச் சிறுத்தைக்குட்டிகள் (Sri...

world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...