பொழுதுபோக்கு

வீட்டில் வளர்க்கும் பறவைகளின் எச்சத்தால் மனிதர்களுக்கு நோய்கள் பரவுகின்றதா?

Share

பொதுவாக நம்மில் சில வீடுகளில் பறவைகள் வளர்ப்பதுண்டு.

சிலர் வீட்டில் வளர்க்கும் பறவைகளின் எச்சத்தால் மனிதர்களுக்கு நோய்கள் பரவும் என்று கூறுகின்றனர்.

உண்மையில் இது உண்மையாக இல்லையா என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

நோய் பரவுவது உண்மையா?

செல்ல பறவைகளின் வயிற்றில் சால்மோனெல்லா என்னும் நுண்ணுயிரிகள் உள்ளன.

குறிப்பாக அவற்றின் எச்சத்தை தவறுதலாக மனிதன் உண்ணும் போதோ, உணவில், குடிநீரில் கலக்கும் போதோ டைபாய்டு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் மனிதர்களில் குறிப்பாக குழந்தைகளுக்கு பேதி, உடல் வெப்பம் அதிகரிப்பது, வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படுகின்றது என்று கூறப்படுகின்றது.

கிளமைடோபைலா சிட்டாஸி நுண்ணுயிரியால் உண்டாகும் சுட்டகோஸிஸ் என்னும் நோய், கிளி, மக்காவ்(Macaw), காக்கடைல்(Cockatiel) போன்ற பறவைகள் மூலம் பரவும் நோய்களாகும்.

செல்ல பறவைகளின் உலர்ந்த எச்சமானது, காற்றிலுள்ள தூசியில் கலந்து மனிதனுக்கு பரவுகிறது. இதனால் உடல் வெப்பம், தலைவலி, உடல் வலி மற்றும் வறண்டு இருமல் ஏற்படும்.

எனவே செல்ல பறவை வளர்ப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும். தற்போது அவற்றை தெரிந்து வைத்து கொள்ளுவோம்.

செல்ல பறவை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

  • பறவைகளின் கூண்டு, உணவு பாத்திரம் மற்றும் எச்சத்தை கையாளும் போது கைகளை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும்.
  • கூண்டுகளை காற்றோட்டமுள்ள இடங்களில் வைக்க வேண்டும். புகை மிகுந்த மற்றும் உருவாகக்கூடிய சமையலறையில் வைக்கக்கூடாது.
  • பறவைகளை முத்தமிடுதல், முகத்திற்கு அருகில் வைத்து கொஞ்சுதல் கூடாது.
  • பறவைகளுக்கு தேவையான உணவு மற்றும் நீரை அளிக்க வேண்டும்.
  • கூண்டில் உள்ள எச்சம் மற்றும் உண்ணாமல் விட்ட உணவுகளை நீண்ட நேரம் அப்படியே வைக்காமல் உடனுக்குடன் அகற்றுதல் அவசியம்.

    #LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...

Untitled 25
பொழுதுபோக்குசினிமா

பாலிவுட்டில் அடுத்த அதிரடி: சல்மான் கான் ஜோடியாக நயன்தாரா! ‘வாரிசு’ இயக்குனர் இயக்கும் புதிய படம்

தென்னிந்திய திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திற்குப்...