யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தினால் நடாத்தப்படும்
ஐந்தாம் அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் அறிமுக நிகழ்வு இன்று முற்பகல் 9.30 மணிக்கு, கலாசாலை வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில், பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்வில் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தை சேர்ந்த பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், உதவிப் பதிவாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் நுண்நிதி டிப்ளமோ கற்கைநெறிக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிகழ்நிலையிலும் கலந்துகொண்டனர்.
நுண்நிதி துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இக் கற்கைநெறி ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.
ஒரு வருட காலத்தை கொண்ட இந்த கற்கைநெறியில் கற்பதற்கு வங்கித்துறை பணியாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , நிதி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்பட பலர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கற்கைநெறியானது அவர்களின் நுண்நிதி பற்றிய அறிவினை மேம்படுத்த உதவுவதோடு, அவர்களது பதவி உயர்வுக்கும் வழிவகுக்கும்.
#SriLankaNews
Leave a comment