ezgif 5 1b70a091fb
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழக முகாமில் இலங்கையர்கள் தற்கொலை முயற்சி!

Share

தமிழகம் – திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில், தற்கொலைக்கு முயன்ற இலங்கைத் தமிழர்கள் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில், வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த முகாமில் இலங்கை, பங்களாதேஷ், சூடான், நைஜீரியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், அங்குள்ள 30 இலங்கை தமிழர்கள், மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, குறித்த 30 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...