IMG 20220619 WA0028
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சாதாரண தர பரீட்சை வினாத்தாள் திருத்துவோர் எரிபொருளை பெற்றுத்தரக்கோரி யாழில் போராட்டம்!

Share

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் எரிபொருளை பெற்றுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம் பெற்று வருகிறது.

வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்ற மதிப்பீட்டாளர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக விசேடமாக கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட படிவத்தினை பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தூர பிரதேசங்களில் இருந்து குறிப்பாக யாழ் மாவட்டத்தில் உள்ள மதிப்பீட்டாளர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு வந்து தமது மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்வதற்காக அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட படிவத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கவில்லை என தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம் இரண்டு மணிக்கு பின்னர் பிரத்தியேகமாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்ததை அடுத்து மதிப்பீட்டு பணிகள் ஆரம்பமாகின.

மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளுகின்ற மதிப்பீட்டாளர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்த போதிலும் இன்று வருகை தந்த மதிப்பீட்டாளர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

தற்போது மேற்கொள்ளப்பட்ட பணி பகிஷ்கரிப்பைத் தொடர்ந்து இன்றைய தினம் மீண்டும் மதியம் 2 மணிக்கு மதிப்பீட்டாளர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இன்றைய தினமும் அதனைப் பெற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் மதிப்பீட்டாளர்கள் தமது பணிப் புறக்கணிப்பை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.

IMG 20220619 WA0029

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...