SAVE 20220606 113211
அரசியல்இலங்கைசெய்திகள்

கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல்!

Share

மின்சாரத் தடை நேரத்தில் ஆயுதத்துடன் வந்த சீருடையினர், என்னை விசாரிப்பதாகக் கூறி விரட்டி உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாமுவேல் சந்திரசேகரம் ராஜன் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அசீஸிடம் அவரது முறைப்பாட்டை நேற்றுக் கையளித்தார்.

அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கடந்த 2ஆம் திகதி இரவு மின்தடை நேரம் பெரியநீலாவணையிலுள்ள எனது வீட்டுக்கு வந்த ஆயுதம் தரித்த நான்கு இராணுவத்தினரும், தங்களைக் கொழும்பு புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளப்படுத்திய இருவரும் விசாரிக்க வந்ததாகக் கூறினர்.

கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுப் பிரிவினர் என்பதால் அவர்களிடம் அடையாள அட்டையைக் கேட்டேன். ஆனால், அவர்கள் தர மறுத்தனர் .

நான் கல்முனையில் உண்ணாவிரதமிருந்தமை தொடக்கம் கடந்த மாதம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வரை நான் சம்பந்தப்பட்ட விடயங்களில் என்னை துருவித்துருவி விசாரித்தனர்.

இறுதியில் வெளியில் நடமாடக்கூடாது என்று அச்சுறுத்தியதோடு எனக்கும் மனைவி, பிள்ளை மற்றும் மருமகனுக்கும் பயமுறுத்தி அச்சுறுத்தல் விடுத்துச் சென்றனர் .

இதற்கு முன்னும், 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போதும், 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதும் இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள், பொலிஸார், புலனாய்வுக் குழுவினர் எனத் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வந்து என்னை விரட்டினர். தற்போது மீண்டும் இந்த அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் மனித உரிமையுடன் சுதந்திரமாக வாழமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு வாக்களித்த மக்களுக்கு உதவ முடியாத நிலையில் உள்ளேன்.

சமூக சேவை செய்ய தடை ஏற்பட்டுள்ளது. உளவியல் ரீதியான தாக்கம் அதிகமாக உள்ளது. குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளனர்.

எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் பயப்பீதியுடன் நடைபிணமாகக் குடும்பத்துடன் காலம் கடத்தி வருகின்றேன்.

இது தொடர்பாக எமது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனிடமும் முறையிட்டுள்ளேன். இவர்களை அடையாளம் கண்டு எனக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...