நகர அபிவிருத்தி அதிகார சபையை நாளை மறுதினம் புதன்கிழமை ஆஜராகுமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழு அழைப்பு விடுத்துள்ளது.
கோப் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தலைமையில் அன்றைய தினம் கூடவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 8ஆம் திகதி கோப் குழுவில் ஆஜராகுமாறு மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை மின்சார சபை எதிர்வரும் 09 ஆம் திகதி கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையின் 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
#SriLankaNews
1 Comment