IMG 20220603 WA0004
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு!

Share

யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக கனடாவில் உள்ள தமிழ் அன்பர்கள் இருவரால் 260 போத்தல் பெட்டடீன் மருந்தும், குழந்தைகளுக்கான பரசிற்றமோல் சிறப் 360 போத்தல்களும் நன் கொடையாக இன்று
வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந் நன்கொடையினைத் தக்க தருணத்தில் மனமுவந்து தந்தமைக்கு வைத்தியசாலைச் சமூகம் சார்பாக நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் சிறுவர்களுக்குத் தேவையான பரசிற்றமோல் சிறப் வெளிநோயாளர் பிரிவில் தேவையான நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் யாழ் போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. யமுனாநந்தா தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...